வியாழன், 13 டிசம்பர், 2007

வேடிக்கை மனிதரை போலே - நாங்கள் வீழ்வோம் என்று நினைத்தாயோ!

தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பறுவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே நென்று நினைத்தாயோ!

- மகாகவி சுப்பிரமனிய பாரதி

மகாகவியின் இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும், என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன் எழுகிறான். உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும், ஒரு சில மணிதுளிகள் எனது இரத்த நாளங்களில் செஞ்குரிதி காட்டாறு போல் ஓடும்.

இவ்வளவு பெரிய உலகத்தை நான் ஒரு தனி மனிதன் எவ்வாறு மாற்ற இயலும் என்றெண்ணம் மெதுவாக வரும். அதன் பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாகி விடும்.

கடந்து 10 ஆண்டுகளில் நான் உணர்ந்த உண்மை, ஒரு மனிதன் தன்னுடைய இலக்கின் மீது உள்ள நோக்கை, தன்னார்வத்தை நிலையாக வைப்பது என்பது மிக கடினமான் செயலாகும். பெரியாரைப் போல், மார்க்ஸைப் போல், சே குவேராவைப் போல், அம்பெத்காரைப் போல் எனக்கு சிந்தினை திறனும், தொலை நோக்கு பார்வையும் இல்லை. ஆனால் அவர்களை போல், இவ்வுலகத்தில் நடக்கும் தவறான, தப்பான் செயல்களைக் கண்டு என்னால் அமைதி காக்கவும் முடியவில்லை. எனது நாகரிகம், பண்பாடு, எல்லாம் தொலைந்து போங்கட்டும், நமது வாழ்வை பார்ப்போம் என்றும் இருக்க முடியவில்லை.

பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும், எழுதவாது செய்வோம் என்று எண்ணியே இந்த வலை பதிவை ஆரம்பிக்கிறேன். இதில், உலகத்தை பற்றி, அரசியல், நாகரிகம், மொழி, மாமனிதர்கள் என்று அனைத்தை பற்றியும் அலசுவோம் வாருங்கள்.

4 கருத்துகள்:

தனசேகர் சொன்னது…

100% உண்மை மயில் ... நாம் உலகத்தை மாற்ற நினைக்கிறோம் . ஆனால் நாம் நம் எண்ணத்தில் செயல்பட முடிவதில்லை . நாம் நமக்காக வாழ்வதைவிட , உலகம் நம்மை என்ன நினைக்குமோ என .. பயந்து அடங்கி விடுகிறோம். இந்த நிலை மாற இன்னும் சில காலம் ஆகும். ஆனால் இந்த மாற்றமே நம் கலாச்சாரச் சீரழிவாக புரிந்துகொள்ளப்படுகிறது. கலச்சார சீரழிவுக்கும் , ஈஇ வித்தியாசம் உணரப்பட வேண்டும்.

Sathish_Japan சொன்னது…

தம்பி ஒரு சின்ன பிழைதிருத்தம். தலைப்பு "புதியதோர் உலகம் செய்வோம்"னு இருக்கணும். "புதியதொரு"னு சொல்றது இலக்கணப்பிழை. ஏதோ என்னால முடிஞ்சது.

Pandi (pop) சொன்னது…

ithey ennam ennakum undu.ithai 2 nabargalidam irunthu padithapin nambikai vargirathu. "Words will turn into actions " endru.

abdur சொன்னது…

இதற்கு விளக்கம் எங்கே ?